விழுப்புரம்:விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரர் கோவிலில் கும்பாபிஷேக தின விழா நடந்தது.விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரர் கோவிலில் கும்பாபிஷேக தின விழாவையொட்டி நேற்று அரசு, வேம்பு திருமண நிகழ்ச்சி நடந்தது. குருஜி ராகவேந்திரர் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை ராகவேந்திர சுவாமி அறக்கட்டளையினர் மற்றும் இளைஞரணியினர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.