நெல்லையப்பர் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.10.52 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2013 10:06
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் 3 மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட 22 உண்டியல்களில் ரூ.10 லட்சத்து 52 ஆயிரத்து 128 ரூபாய் பணம் வசூலாகியிருந்தது. 30 கிராம் தங்கம், 60 கிராம் வெள்ளி, வெளிநாட்டு டாலர்களும் காணிக்கையாக கிடைத்துள்ளது. நெல்லையப்பர் கோயிலில் 20 உண்டியல்களும், உப கோயில்களான ஈசானிய விநாயகர், புட்டாரத்தி அம்மன் கோயில்களில் உண்டியலும் சேர்த்து மொத்தம் 22 உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. நெல்லையப்பர் கோயில் தக்காரும், உதவிக் கமிஷனருமான கண்ணதாசன், தூத்துக்குடி உதவிக் கமிஷனர் செல்லத்துரை தலைமையில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், ஆய்வர் ஆனந்த் முன்னிலை வகித்தனர். உண்டியல் எண்ணும் பணியல் நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் பக்தர்கள், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். கடந்த மார்ச் மாதம் 14ம்தேதிக்கு பிறகு அதாவது மூன்று மாதம் கழித்து நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டன. உண்டியலில் பக்தர்கள் 12 லட்சத்து 52 ஆயிரத்து 128 ரூபாய் மற்றும் 50 காசுகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதுதவிர 30 கிராம் 40 மில்லி தங்கம், 60 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணம் 6 டாலர், மலேசிய பணம் 10 ரிங்கிட் காணிக்கை இருந்தது.