திருக்கோவிலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2013 10:06
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் 26ம் தேதி நடக்கிறது. திருக்கோவிலூர், கீழையூரில் பழமையான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. கோவில் பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட்டு, வரும் 26ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையடுத்து வரும் 23ம் தேதி காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. கும்பாபிஷேக தினமான 26ம் தேதி காலை 6:00 மணிக்கு நான்காவதுகால யாகபூஜை, மகா பூர்ணாஹூதி நடக்கிறது. தொடர்ந்து 9: 45 மணிக்குமேல் 10.45 மணிக்குள் ராஜகோபுரம், அம்மன் மூலஸ்தான கோபுரம் மற்றும் கெங்கையம்மன் கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.