பதிவு செய்த நாள்
19
ஜூன்
2013
10:06
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின், பிரசாத கடை, ஓர் ஆண்டுக்கு, 1.17 கோடி ரூபாய் ஏலம் விடப்பட்டது. திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில், பிரசாத விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான பிரசாத நிலையம், ஆண்டுக்கு ஒரு முறை, ஏலம் விடப்படுகிறது. இந்தாண்டிற்கான ஏலம், கடந்த மாதம், 14, 15ம் தேதிகளில் நடந்தது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் எனவும், ஆண்டுதோறும், ஏலம் எடுத்த தொகையில் இருந்து, 15 சதவீதம் கூடுதல் செலுத்த வேண்டும் எனவும் தீர்மானித்து, 1.17 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது.
இந்நிலையில், ஆண்டுதோறும் ஏலம் நடத்த வேண்டும் என, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. நேற்று, பிரசாத கடைக்கு மறு ஏலம் நடந்நது. கோவில் இணை ஆணையர் புகழேந்தி தலைமையில் நடந்த இந்த ஏலத்தில், பிரசாத கடை, 1.17 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடந்த ஆண்டு, 1.01 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இதன் மூலம், கோவிலுக்கு, 16.50 லட்சம் ரூபாய் கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது.