தென்காசி: தென்காசியில் தர்ம சாஸ்தா இசக்கியம்மன் கோயிலில் இன்று (21ம் தேதி)கும்பாபிஷேகம் நடக்கிறது.தென்காசி தெப்பகுளம் அருகில் உள்ள தர்ம சாஸ்தா இசக்கியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு 4ம் கால யாகசாலைபூஜை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி விதிஉலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.