பதிவு செய்த நாள்
26
ஜூன்
2013
10:06
நாகர்கோவில்: கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிகள், மூன்றரை மாதத்திற்கு பின் நிறைவு பெற்றன. ஜூலை, 1ம் தேதி முதல், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர். கன்னியாகுமரி கடல் நடுவில், திருவள்ளுவர் சிலை, தி.மு.க., ஆட்சியில், 2000ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. சிலை அமைக்கப்பட்டபோதே, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதில் உள்ள உப்புத் தன்மையை நீக்கி, ரசாயனக் கலவை பூச வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 2011ல், ரசாயன கலவை பூசியிருக்க வேண்டும். ஆனால், 2012 இறுதி வரை பணி நடக்காததால், போராட்ட அறிவிப்பை கருணாநிதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, அவசரமாக டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மார்ச், 1ம் தேதி துவங்கிய பணி, நிறைவு பெற்றுள்ளது. "ஜூலை, 1ம் தேதி முதல், பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.