ஆண்டாள் கோயில் தேரோட்டம்: ஆக.9ல் உள்ளூர் விடுமுறை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2013 10:06
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம், ஆகஸ்ட் 9 ம்தேதி நடப்பதையொட்டி, அன்று உள்ளூர் விடுமுறை விட முடிவு செய்யப்பட்டது. ஆண்டாள் கோயில் தேரோட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார். மகேஸ்வரன் எஸ்.பி., இணை ஆணையர் தனபாலன், செயல் அலுவலர் சுப்பிரமணியன், தக்கார் ரவிச்சந்திரன், ஒன்றிய தலைவர் காளிமுத்து, நகராட்சி தலைவி செந்தில்குமாரி, பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தில் செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் பற்றி பேசப்பட்டது. தேரோட்டம் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கவும், சிறப்பு பேருந்து இயக்கவும், முடிவு செய்யப்பட்டது.