திருவள்ளூர்: மழை வேண்டி, திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், 30 வேத விற்பன்னர்கள் பங்கேற்ற ஜெபம் நடைபெற்றது. மழை பெய்ய வேண்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிணங்க, திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் நேற்று சிறப்பு ஜெபம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள தாயார் சன்னிதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும், கோவில் திருக்குளத்தில், 30 வேத விற்பன்னர்கள் மழை பெய்ய வேண்டி காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை தண்ணீரில் நின்று ஜெபம் செய்தனர்.