திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.திருக்கோவிலூர், கீழையூரில் மகா மாரியம்மன் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக ராஜ கோபுரம் கட்டப்பட்டது. அய்யப்பன், கெங்கையம்மன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டது.இதற்கான மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. கடந்த 23ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி முடிந்து 9.00 மணிக்கு கடம் புறப்பாடாகி முதலில் அய்யப்பன் கோவில் மூலகலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.இதனையடுத்து கெங்கயம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. சுந்தரமூர்த்தி குருக்கள் தலைமையிலான வேதவிற்பனர்கள் வேதமந்திரம் முழங்க புனிதநீர் ஊற்றினர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர், பக்தர்கள் செய்திருந்தனர்.