போத்தியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2013 10:06
கிருமாம்பாக்கம்: அபிஷேகப்பாக்கம் போத்தியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய, அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அபிஷேகபாக்கத்தில் நடந்த கூட்டத்தில், ழொலி வீரப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் வீமன் வரவேற்றார். துணைத் தலைவர் தெல்மார் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் கணேசன், புதுச்சேரி விடுதலைப் பேரவைத் தலைவர் அருள்தாஸ், பிரேம்குமார், கமலதாஸ், சிவாநந்தம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த போத்தியம்மன் கோவிலுக்கு மூன்றாவது முறையாக கும்பாபிஷேகம் நடத்துவது, அதற்காக முதல்வர் ரங்கசாமி, 10 லட்சம் ரூபாய் நிதி வழங்க கேட்டுக்கொள்வது, இந்து அறநிலையத்துறை மூலமும் நிதி ஒதுக்க கோரிக்கை வைப்பது, கோவில் பூஜை நடத்த நிதியுதவி கேட்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைச் செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.