பதிவு செய்த நாள்
01
ஜூலை
2013
10:07
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட, மூன்று கோவில்களுக்கு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால், மத்திய உளவுத் துறை மேற்பார்வையில், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாதந்தோறும், உளவுத் துறை ஆய்வு செய்து, பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து, ஆலோசனை வழங்கப்படுகிறது. தற்போது, இக்கோவில் தவிர, திருப்பரங்குன்றம், அழகர்கோவில் கோவிலுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த, உளவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து, 3 கோவில்களிலும், கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.