பதிவு செய்த நாள்
01
ஜூலை
2013
10:07
திருப்பதி: திருமலை, ஏழுமலையானை தரிசிக்க நேற்று, தர்ம தரிசனத்தில், 27 மணி நேரமும், பாதயாத்திரை பக்தர்கள் தரிசனத்தில், 18 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்தில், 8 மணி நேரமும் ஆனது. பக்தர்கள் கூட்டம் காரணமாக, ரூ.300 விரைவு தரிசனம் மதியம் ரத்து செய்யப்பட்டது. சனிக்கிழமை முழுவதும், 70 ஆயிரம் பேர், ஏழுமலையானை தரிசனம் செய்தனர். நேற்று, மாலை நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள், 31 கம்பார்ட்மென்ட்களில் நிறைந்து, 2 கி.மீ., தொலைவில் ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்தனர்.
திருப்பதியில் இஸ்ரோ தலைவர்: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் ராதா கிருஷ்ணன், தன் குடும்பத்தாருடன், நேற்று, திருமலைக்கு வந்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவருக்கு, சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவிலில் இருந்து வெளியில் வந்த ராதாகிருஷ்ணன், ""பி.எஸ்.எல்.வி.சி.22., தொலை தொடர்பு செயற்கோளை விண்வெளியில் செலுத்த உள்ளதால், ஏழுமலையானை தரிசித்து செல்கிறேன். ஆகஸ்டு மாதம், சி.எஸ்.எல்.வி., பி 5., செயற்கோளை விண்ணில் செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதுவும், வெற்றிகரமாக. விண்ணில் செலுத்தப்படும் என்றார்.