பதிவு செய்த நாள்
01
ஜூலை
2013
10:07
மயிலாடுதுறை: மயிலாடுதுறை, மயூரநாதர் கோவில் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் குறித்து, தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார். நாகை மாவட்டம், மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் குளத்திற்கு, நேற்று மாலை, ராஜகோபால் என்பவர் குளிக்கச் சென்றார். படியில் இறங்கியபோது, கனமான பொருள் தட்டுப்பட்டுள்ளது. அப்பொருளை எடுத்து பார்த்தபோது, தலா, ஒன்றரை அடி உயரமுள்ள சந்திரசேகர சுவாமி, மனோன்மணி சிலை என்பது தெரியவந்தது. சிலைகள் கோவிலில் ஒப்படைக்கப்பட்டன. பித்தளையால் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் சமீபத்தில் செய்யப்பட்டவை. சுவாமியின் இடது கை உடைந்துள்ளதால், திருடர்கள், இந்த சிலைகளை, இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது. தாசில்தார் கலைச்செல்வி விசாரிக்கிறார்.