திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி மங்கை மஹாலில் ஸ்ரீ ராமநாம வார வழிபாட்டு சபை சார்பில், சீதா கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடந்தது. இதில் நேற்று முன்தினம் மாலை, 5 மணிக்கு சீதா கல்யாண வைபத்தையொட்டி, ராமர் கோவிலிருந்து, சீர்வரிசைகளுடன் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடந்தது. நேற்றுக்காலை விவாக மஹோற்சவ பஜனை சம்பிரதாயப்படி, சென்னை ஸ்ரீமதி கல்யாணி மார்க்கப்பந்து கோஷ்டியினர் பஜனை பாடி, திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, 11.15 மணிக்கு வேத மந்திரம் முழங்க திருமாங்கல்ய தாரணம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாட்டை ஸ்ரீ ராமநாம வார வழிபாட்டு சபை சார்பில் துளசிதாஸ் கோபாலகிருஷ்ணன் செய்திருந்தனர்.