திருவாடானை: திருவாடானை அருகே அடுத்தகுடி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீ மிதிக்கும் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி ஓட்டுனர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கபட்டது. கலைநிகழ்ச்சி நடந்தது.