பதிவு செய்த நாள்
02
ஜூலை
2013
10:07
திருப்புவனம்: மடப்புரம் காளி கோயிலில், அரசு உத்தரவுப்படி மழை வேண்டி, "வருண ஜெப பூஜை, ஹோமம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட முதுநிலை கோயிலில் வருணஜெப பூஜை, ஹோமம் நடத்த அரசு உத்தரவிட்டது. அதற்கிணங்க, நேற்று மடப்புரம் காளி கோயிலில் யாகம் நடந்தது. இதில், தமிழ்த்திருமுறை, வேதபாராயணம் பாடல்கள் இசைக்கப்பட்டன. ஹோமம், பூஜையை, அர்ச்சகர் செண்பகம் பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். காலை 9.15லிருந்து மதியம் 1.15 மணி வரை ஹோமம் வளர்க்கப்பட்டது. பக்தர்கள் கலந்து கொண்டனர். உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, அறங்காவலர்கள் குழு தலைவர் ராஜாங்கம், உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், செல்லம், சுரேஷ், சுதா, அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.