திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த அன்னம்புத்தூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் மகாபாரத பெரு விழா நடக்கிறது. 1ம் தேதி காலை கொடியேற்றம் நடந்தது. அன்று மதியம் கோவிலில் போளூர் தாலுகா சேத்துப் பட்டு பேராசிரியர் தீர்த்த ஏழுமலை மகா பாரத விரிவுரையாற்றினார். இது 18ம் தேதி வரை தினம் நடக்கிறது. 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை தினமும் இரவில் மகாபாரத தெருக் கூத்து நடக்கிறது. 10ம் தேதி அம்மன் திருக்கல்யாணம், 18ம் தேதி காலை துரி யோதனன் படுகளம், மாலை தீமிதி உற்சவம் நடக்கிறது.