பதிவு செய்த நாள்
04
ஜூலை
2013
10:07
சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், பக்தர்களின் வசதிக்காக, நிழற்குடை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், பெருமாள் சன்னதியில் இருந்து, ஆண்டாள் சன்னதிக்கு செல்வதற்கு, நிழற்குடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டாள் சன்னதியில் இருந்து, தாயார் சன்னதிக்கு செல்லும் வழியில் நிழற்குடை இல்லாததால், கோடை மற்றும் மழைக்காலங்களில் பக்தர்கள் சிரமப்பட வேண்டியிருந்தது. பக்தர்கள் வசதிக்காக, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், ஆண்டாள், தாயார் சன்னதிக்கு இடையே நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளது.