திண்டுக்கல்: அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன. திண்டுக்கல் மலையடி வாரத்தில் உள்ள ஓதசுவாமிகள் கோயிலில் நேற்று காலை சேஷவாகனத்தில் சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோட்டை மாரியம்மன் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மலையடிவாரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று மாலை பிரத்தியங்கரா ஹோமம் நடந்தது. திண்டுக்கல் ரமணாச்சலத்தில் வார வழிபாடும், பஜனையும் நடத்தப்பட்டது . வடமதுரை சிரஞ்சீவி பக்த ஆஞ்ச நேயர் கோயிலில் திரு மஞ்சனம், மலர் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது.