பதிவு செய்த நாள்
08
ஜூலை
2013
10:07
சேலம்: ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், தீவிரமாக செய்து வருகின்றனர். நேற்று காலை, முகூர்த்தக்காலுக்கு, மஞ்சள் பூசி, மாவிலை தோரணம் கட்டப்பட்டது. கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கோவிலை சுற்றி முகூர்த்தக்கால் எடுத்து வரப்பட்டது. பின்னர், முகூர்த்தகால் நடப்பட்டது. கோவில் பூசாரி சிவா தலைமையில், பூசாரிகள், முகூர்த்தக்காலுக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் சவுண்டப்பன், இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஜூலை, 23ம் தேதி பூச்சாட்டுதல், 30ம் தேதி கம்பம் நடுதல், ஆகஸ்ட் மாதம், 3ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 5ம் தேதி சக்தி அழைப்பு, 6ம் தேதி கரகம் எடுத்தல், 7ம் தேதி முதல், 10ம் தேதி முதல் பொங்கல் வைத்தல், 11ம் தேதி சத்தாபரணம், 13ம் தேதி பால்குட ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது.