பதிவு செய்த நாள்
08
ஜூலை
2013
11:07
துறையூர்: பெருமாள் கோவிலில் நடக்கவுள்ள கும்பாபிஷேகம் முன்னிட்டு, புதியதாக செய்யப்பட்ட வாகன வெள்ளோட்டம் நடந்தது. இதில் தஞ்சாவூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பாபாஜி ராஜா போன்ஸ்லே பங்கேற்றார்.திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பெருமாள்பாளையத்தில் பழமை வாய்ந்த சிவன் மற்றும் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த, 1972, 1999 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கும்பாபிஷேகம் நடத்த கோவில் திருப்பணிகள், கடந்த, 2011 ஜூன், 5ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. ரூ.40 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து, புதியதாக விநாயகர், சுப்ரமணியர், கஜலட்சுமி மற்றும் ஆஞ்சநேயர் கோவில் கட்டி வர்ணம் பூசும் வேலை நடக்கிறது.கும்பாபிஷேகம் பத்திரிக்கை, யாகசாலை அமைக்க முகூர்த்த கால் ஊன்றுதல், சாமி வாகனங்களுக்கு கண் திறந்து வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் கருப்பண்ணசாமி, பெருமாளுக்கு அனுமந்த, கருட வாகனம், சிவனுக்கு குதிரை, மயில், காளை, பெருச்சாளி, சின்னக்காளை வாகனங்கள் வெள்ளோட்டம் விடப்பட்டது.நிகழ்ச்சியில் வாகன ஸ்தபதி கீரம்பூர் தியாகராஜன், அறங்காவலர் சண்முகம், திருப்பணி கமிட்டி தலைவர் ராமநாதன், செயலாளர் வக்கீல் புஷ்பராஜ், துணைத்தலைவர் ரெங்கநாதன், உறுப்பினர்கள் அழகேசன், ஆசிரியர் நடராஜன், டாக்டர் ஜெயசங்கர், மூக்கவுண்டர் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினராக தஞ்சை மன்னர் பரம்பரைச் சேர்ந்த பாபாஜி ராஜா போன்ஸ்லே, துறையூர் யூனியன் முன்னாள் தலைவர் தர்மன் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.