பதிவு செய்த நாள்
09
ஜூலை
2013
10:07
கோல்கட்டா: வரும், செப்., 9 ல், விநாயகர் சதுர்த்தியையொட்டி, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள, மிகச் சிறிய நாடான, ஐவரி கோஸ்ட் சார்பில், விநாயகர் உருவம் அச்சிடப்பட்ட, வெள்ளி நாணயங்களை வெளியிடப்படவுள்ளது. யானையின் முகம் அடங்கிய உருவத்தை இலச்சினையாக கொண்ட அந்நாடு வெளியிடும், 25 கிராம் எடையுள்ள அந்த நாணயத்தில், "வக்ரதுண்ட மஹாகாய... என்ற, விநாயகரை வழிபடும், சமஸ்கிருத ஸ்லோகம் எழுதப்பட்டு இருக்கும். ஒரு நாணயம், ரூ. 8,001 க்கு விற்பனை செய்யப்படும். இந்த நாணயங்களை அச்சிடும் பணி, ஜெர்மனியில் நடக்கிறது.