பதிவு செய்த நாள்
09
ஜூலை
2013
10:07
தர்மபுரி: தர்மபுரி டவுன் தங்கவேலு தெரு, ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக வரும், 15ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி வரும், 13ம் தேதி காலை, 10 மணிக்கு கணபதி ஹோமம், விநாயகர் பூஜையும், மாலை, 5 மணிக்கு சாலை விநாயகர் பகுதியிலிருந்து தீர்த்த புறப்பாடும், 6 மணிக்கு வாஸ்து ஹோமம், பூஜையும், மஹா தீபாராதனையும் நடக்கிறது.வரும், 14ம் தேதி காலை, 9 மணிக்கு முதல்கால யாக பூஜையும், கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனையும், மாலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், யாத்ரா தானமும், சண்டி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனையும், இரவு, 11 மணிக்கு ஸ்வாமிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதலும், கோபுர கலசம் வைத்தலும் நடக்கிறது.வரும், 15ம் தேதி மாலை, 6 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜையும், காலை, 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மஹா கும்பாபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 16ம் தேதி முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.