தென்காசி: தென்காசி சந்தி விநாயகர் கோயிலில் வரும் 14ம் தேதி வருஷாபிஷேகம் நடக்கிறது.தென்காசி கூலைக்கடை பஜாரில் உள்ள சந்தி விநாயகர் கோயிலில் வரும் 14ம் தேதி வருஷாபிஷேகம் நடக்கிறது. வரும் 13ம் தேதி மாக்காப்புடன் துவங்குகிறது. 14ம் தேதி காலை 4 மணிக்கு கணபதி ஹோமமும் 10.30 மணிக்கு கும்ப அபிஷேகமும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு முழுகாப்பு தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.