பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
10:07
ஓசூர்: ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ ஸ்ரீ விஜய விநாயகர் கோவிலில், வரும் 14ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா, 14ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, 12ம் தேதி காலை, 9 மணி முதல் மக்கள இசை திருமுறை பாராயணம், வேதபாராயணம், தேவதா அனுக்ஜை, ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகஹசனம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ பூஜை ஆகியவை நடக்கிறது.மாலை, 6 மணிக்கு மங்கள இசை, வேதபாராயணம், விக்னேஷ்வரபூஜை, ரஷாபந்தனம், யாகசாலை, பிரசேவம், முதல்கால யாகபூஜை, ஓமதிரவியம், பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது. வரும், 13ம் தேதி காலை, 8.30 மணிக்கு வேதிகார்ச்சனை, இரண்டாம் கால யாக பூஜை, புண்ணியாக ஹவசனம், மகா பூர்ணாஹூதி ஆகியவை நடக்கிறது. மாலை, 5 மணிக்கு திருமுறை பராயணம், தேவபாராயணம், மூன்றாம் கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.இரவு, 9 மணிக்கு யந்தரஸ்தாபனம், அஷ்ட பந்தனமருந்து சான்றுதல் நடக்கிறது. 14ம் தேதி அதிகாலை மங்கள இசை திருமறை பாராயணம், வேதபராயணம், நான்காலம் கால யாக பூஜை, துவார பூஜை, விசேஷ திரவியம், நாடி சந்தானம் யாத்ராதானம் ஆகியவை நடக்கிறது.காலை, 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை உபசார பூஜைகள் நடக்கிறது. காலை, 10 மணிக்கு மூன்று நிலை ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 10.15 மணிக்கு மூலாலய கும்பாபிஷேகம் தொடர்ந்து மஹா அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.மதியம், 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவில் ஓசூர் எம்.எல்.ஏ., கோபிநாத், முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணரெட்டி, துணைத்தலைவர் ராமு, முன்னாள் நகராட்சி தலைவர்கள் சத்யா, மாதேஸ்வரன், தி.மு.க., நகர செயலாளர் விஜயகுமார், கவுன்சிலர்கள் சக்திவேல், எல்லோராமணி, முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.