பதிவு செய்த நாள்
12
ஜூலை
2013
10:07
விருத்தாசலம்: விருத்தாசலம், புதுக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடக்கிறது. விருத்தாசலம், புதுக்குப்பத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை (13ம் தேதி) காலை 7:30 மணிக்கு மேல் மகாஹோமம், கணபதி ஹோமம், லஷ்மி ஹோமங்களுடன் துவங்குகிறது. மாலை 6:00 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால, பூஜை பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. 14ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், மாலை 6:00 மணியளவில் மூன்றாவது கால பூஜை நடக்கிறது. தொடர்ந்து 15ம் தேதி காலை 6:00 மணியளவில் நான்காம் கால பூஜை, 8:00 மணியளவில் பிம்பசுத்தியும், 9:30 மணியளவில் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆலய திருப்பணிக் குழுவினரும், கிராமத்தினரும் செய்து வருகின்றனர்.