திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில், நான்கு மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. மற்ற வேலைகள் முடிந்த நிலையில் பிரகாரம் தளம் இன்னும் சீரமைக்கப்படவில்லை. கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருக்கிறது. அங்கபிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த முடியாத பக்தர்கள் நிறைய பேர் உள்ளனர். திருவெற்றியூர் மூர்த்தி கூறுகையில், "" பக்தர்களுக்கு எந்தவித வசதியும் இல்லை. தண்ணீர், கழிப்பறை, தங்கும் வசதிகள் இல்லாததால் பெரும் சிரமம் ஏற்படுகிறது, என்றனர். கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், ""விரைவில் சீரமைக்கப்படும், என்றனர்.