Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் ... பழநியில் ஆடி லட்சார்ச்சனை ஜூலை 17ல் துவக்கம்! பழநியில் ஆடி லட்சார்ச்சனை ஜூலை 17ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரமாகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2013
10:07

புதுக்கோட்டை: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு இன்று 12ம் தேதி பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோ வில். இங்கு ஆண்டுதோறும் ஆடித்திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா வரும் 23ம் தேதி துவ ங்கி ஆகஸ்ட் 10 முடிய தொட ர்ந்து 19 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 31ம் தேதி தேர்திருவிழா நடக்கிறது. இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இவ்விழாவில் ராஜ அலங்காரத்துடன் அம்மன் திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தேர்த்திருவிழாவில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள சிவகங்கை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் தொட்டு இழுக்க உள்ளனர். ஆகஸ்ட் 9ம் தேதி தெப்பத் திருவிழாவும், 10ம் தேதி விடையாற்றி நிகழ்வும் நடக்கிறது. ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று பூச்சொரிதல் விழா நடக்கிறது. அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் பல்லக்குளில் பக்தர்கள் பூ தட்டுகள் எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இன்று இரவு விடிய, விடிய அம்மனுக்கு புஷ்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், அலங்கார தீபாராதனை போன்ற நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மனிதனை நல்ல பண்புள்ளவனாக உருவாக்க, இளைஞர்களிடம் தர்மசிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar