பதிவு செய்த நாள்
12
ஜூலை
2013
10:07
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஜேடுகொத்தூரில் உள்ள முனிகானப்பள்ளி வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம், வரும், 14ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, இன்று (ஜூலை 12) மாலை, 5 மணிக்கு சுத்தி புண்யாஹம், வாஸ்து சாந்தி, அங்குரார்பனம், ரக்ஷாபந்தனம் நடக்கிறது. நாளை (ஜூலை 13) காலை, 7 மணிக்கு பாலாலய சாமியை கும்பத்தில் ஆவாகனம் செய்து கும்ப அலங்காரம் செய்து கலசஸ்தாபனம், கலச ஆவாஹனம், முதல் கால யாக பூஜை நடக்கிறது. மாலை, 4 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, வெங்கட்ரமணசாமி பரிவார தேவதைகள் பஞ்சகவ்ய ஸ்நபன அதிவாச பூஜைகள், வெங்கட்ரமணசாமி பரிவார தேவதா அஷ்டபந்தன பிரதிஷ்டை நடக்கிறது. வரும், 14ம் தேதி காலை, 5 மணிக்கு நாடி சந்தனம், மூன்றாம் கால யாகபூஜை, 108 கலச அபிஷேகம் நடக்கிறது. 9 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணசாமிக்கு திருக்கல்யாணமும் இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை சின்னமட்டாரப்பள்ளி மற்றும் ஜேடுகொத்தூரை சேர்ந்த கும்பாபிஷேக விழாக்குழுவினர் செய்துள்ளனர்.