திண்டிவனம் : திண்டிவனம் அருகே உள்ள ஏப்பாக்கம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையோட்டி கடந்த 14ந் தேதி காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, லட்சுமி பூஜை, சுதர்சன ஹோமம், பஞ்சபாலிகை பூஜை, புற்றுமண் எடுத்து வந்து காப்பு கட்டுதலுடன் முதற்கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கோ பூஜை, அஷ்ட திரவ்ய ஹோமம், மூலிகை ஹோமங்கள், தேவார திருப்புகழுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தது. காலை 9.45 மணிக்கு ஸ்ரீலஸ்ரீ சீனுவாச சாமி, நாகராஜ் குருக்கள் குழுவினர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். ஊராட்சி தலைவர் மங்கவரத்தாள் காளிதாஸ் ஏற்பாடுகளை செய்தார். இளைஞர் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.