பூட்டை மாரியம்மன் கோவிலில் 19ம் தேதி தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2013 11:07
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் வரும் 19ம் தேதி நடக்கிறது. சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர் மிகவும் பழமை வாய்ந்ததாகும். தேர் மிகவும் சிதிலமடைந்ததால் புதிய தேர் செய்ய ஊராட்சி தலைவர் கந்தசாமி மற்றும் பொது மக்கள் சார்பில் அமைச்சர் மோகனிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோவிலுக்கு புதிய தேர் அமைக்க தமிழக முதல்வர் 20 லட்சம் ருபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இதையொட்டி புதிய தேர் செய்யும் பணி கடந்த 6 மாதமாக இரவு பகலாக நடந்தது. தற்போது தேர் செய்யும் பணி முடிந்து சக்கரங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வெள்ளோட்டம்புதிய தேர் வெள்ளோட் டம் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு அமைச்சர் மோகன் தலைமையில் நடக்கிறது. ஆடி மாதம் நடக் கும் தேர் திருவிழாவில் புதிய தேர் பவனி வரும் என்பது குறிப்பிடத்தக்கது