பதிவு செய்த நாள்
17
ஜூலை
2013
11:07
கூவம்:கூவம் திரவுபதி அம்மன் உடனுறை தர்மராஜா கோவிலில், வரும், 19ம் தேதி, பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ளது கூவம் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் உடனுறை தர்மராஜா கோவிலில், வரும், 19ம்தேதி வெள்ளிக்கிழமை, காலை, 8:00 மணிக்கு மேல், 9:30 மணிக்குள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். விழாவில் வரும், 28ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அக்னி வசந்த பெருவிழா நடைபெறும். நாள் நேரம் நிகழ்ச்சி
19.07.2013 காலை 8:00 மணி கொடியேற்றுதல் வைபவம்
20.07.2013 காலை, இரவு அபிஷேகம், அம்மன் திருவீதி உலா
21.07.2013 காலை, இரவு அபிஷேகம், அம்மன் திருவீதி உலா
22.07.2013 காலை, இரவு அபிஷேகம், அம்மன் திருவீதிஉலா
23.07.2013 மாலை 6:00 மணி அம்மனுக்கு சீர் வரிசை எடுத்து வருதல் இரவு 7:00 மணி திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை
24.07.2013 காலை, இரவு அபிஷேகம், அம்மன் திருவீதி உலா
25.07.2013 மாலை காயத்ரி கங்கா தீப விளக்கு பூஜை இரவு அபிஷேகம், அம்மன் திருவீதி உலா
26.07.2013 காலை, இரவு அபிஷேகம், அம்மன் திருவீதி உலா
27.07.2013 காலை அபிஷேகம், அம்மன் திருவீதி உலா மாலை 6:00 மணி அலகுபானையில் கத்தி நிறுத்துதல்
28.07.2013 காலை 6:00 மணி படுகளம் பாஞ்சாலி அம்மன் சபதம் பகல் 12:00 மணி அக்கினி மூட்டுதல் மதியம் 1:30 மணி காப்பு கட்டுதல் மாலை 6:00 மணி அக்னி மஹோற்சவம் இரவு 8:00 மணி அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா இரவு 10:00 மணி அன்னதானம்
29.07.2013 பகல் 2:00 மணி பட்டாபிஷேக பாரத சொற்பொழிவு மாலை 6:00 மணி விடையாற்றி உற்சவம்.