பதிவு செய்த நாள்
18
ஜூலை
2013
10:07
ஐங்காலமும் தொழுது, ரமலான் மாதம் நோன்பும் நோற்று, தன்னை எந்த கெட்ட செயலிலும் ஈடுபடுத்தாமல், கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெண், அவள் விரும்புகிற சொர்க்கத்தில் நுழைவாள், என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அயல்வீட்டாருடன் அன்புவைப்பதும் சொர்க்கம் செல்ல வழி என அவர்கள் கூறுகிறார்கள். பெண்களுக்காக அவர்கள் வழங்கிய அறிவுரையைக் கேட்கிறீர்களா! தலையில் முக்காடு இல்லாமல், உடலை மறைத்துக்கொள்ளாமல், வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண் ஷைத்தானின் முகத்தைக் கொண்டு செல்கிறாள். அவள் வீட்டுக்குத் திரும்பி வரும்போது ஷைத்தானின் முகத்தைக் கொண்டு வருகிறாள். வேடிக்கை பார்ப்பதற்காக ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறுவாளேயானால், அவளுடைய பெண்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் விபரீதமும் ஏற்பட்டு விடுகிறது. தொழுதாலும், நோன்பு நோற்றாலும், தர்மம் செய்தாலும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை திட்டி வேதனைப்படுத்தும் பெண் நரகத்திற்கே செல்வாள். அதே நேரம் தொழாத, தர்மம் செய்யாத, நோன்பு நோற்காதவளாக இருந்தாலும், ஒரு பெண் பக்கத்து வீட்டாருடன் அன்பு கொண்டிருந்தால் அவள் சொர்க்கம் நுழைவாள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.25