பண்ணாரியில் தலை ஆடி: பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2013 10:07
சத்தியமங்கலம்: தலை ஆடியை முன்னிட்டு, சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதான, பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து இக்கோவிலுக்கு பக்தர்கள் அதிகமாக வந்து செல்வர். ஒவ்வொரு ஆண்டும், தமிழ் மாதம் பங்குனியில், இக்கோவிலில் நடக்கும் குண்டம் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இங்கு நேற்று தலை ஆடியை முன்னிட்டு, காலை ஆறு மணி முதல் பக்தர்கள் வரத்துவங்கினர். மதிய நேரத்தில் கோவிலை சுற்றிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தலை ஆடியை முன்னிட்டு பண்ணாரி அம்மன் தங்க கவசத்தில் அருள் பாலித்தார்.கோவிலில் பல்வேறு பகுதிகளில் தயிர்சாதம், தக்காளி சாதம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி, நேர்த்தி கடனை நிறைவு செய்தனர்.