பதிவு செய்த நாள்
18
ஜூலை
2013
10:07
நாகர்கோவில்: கன்னியாகுமரியில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில், சிவன், பிரம்மா, விஷ்ணு என, மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர். கோவில் முகப்பில், 133 அடி உயர, ராஜகோபுரம் உள்ளது. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட, ராஜகோபுரத்தில் உள்ள ஏழு அடுக்குகளிலும், "ராமாயண கதை மூலிகை ஓவியங்களாக வரையப்பட்டு உள்ளன. பழமை வாய்ந்த ஓவியங்கள், பறவைகள் எச்சத்தாலும், பக்தர்கள் கை வைப்பதாலும் அழிந்து வருகிறது. இதை புதுப்பிக்க, முதல்வர் ஜெ., உத்தரவிட்டிருந்தார். இதன்படி, தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, வேதியியல் நிபுணர் வீரராகவன் தலைமையில், குழுவினர் ஆய்வு செய்தனர்.