ராமேஸ்வரம் கோயிலில் ரூ.8 லட்சத்தில் தேர் சக்கரங்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2013 10:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில், பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட சுவாமி, அம்மன் மரத்தேர், மாசிமாதம் தேரோட்டத்தில், வீதி உலா வரும். இந்த பழமையான தேர்களில் உள்ள, மரச்சக்கரங்கள் சேதமடைந்தன. இவை நேற்று அகற்றப்பட்டு, திருச்சி பாரத் மிகுமின் நிலையத்தில், 8 லட்ச ரூபாயில் தயாரிக்கப்பட்ட எட்டு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன.