காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, இன்று பகல் 12 மணிக்கு மேல் அம்மனுக்கு பச்ச மஞ்சள் அபிஷேகம் நடக்கிறது. நேற்று மாலை 5 மணி முதல், பெண் பக்தர்கள், மஞ்சள் அரைக்க தொடங்கினர். 24 அம்மிகள் கோயில் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் மஞ்சள் அரைத்து, அவற்றை அபிஷேக அண்டாவில் வைத்தனர். நேற்று இரவு 9 மணி வரை அரைத்தனர். இன்று மதியம் 12 மணிக்கு மஞ்சள் அபிஷேகம் நடைபெறும்.26ம் தேதி இரண்டாம் வெள்ளியன்று, திருவிளக்கு பூஜையும், ஆக.,2ம் தேதி கணபதி ஹோமம், சங்காபிஷேகமும், 9ம் தேதி திருவிளக்கு பூஜை, 16ம் தேதி கோமாதா பூஜையும் நடக்கிறது.ஏற்பாடுகளை, உதவி ஆணையர் ரோஜலி சுமதா, செயல் அலுவலர் அய்யர் சிவமணி செய்து வருகின்றனர்.