*ஒருவன் எத்தனை முறை தோல்வியுற்றாலும், மனதிற்குள் தோல்வியடையாமல் இடைவிடாமல் முயற்சி செய்பவனே உண்மையான வெற்றியாளன். உலகமே அவனைத் தோல்வியாளனாக கருதினாலும் கூட அவன் சிறந்த வெற்றியாளனே. *உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வதால் வாழ்க்கை நரகமாக மாறிவிடும். எனவே, யாரைக் கண்டுபொறாமைப்படத் தேவையே இல்லை. *உங்களிடம் என்ன இருக்கிறதோ, நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதை எண்ணி பெருமிதம் கொள்ளுங்கள். உங்களின் தனித்தன்மை உலகில் வேறு யாருக்கும் கிடையாது. *தீமையே உலகத்தில் இல்லை என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது. அதற்காக, தீமையை கண்டு அஞ்சி ஓடக்கூடாது. பயந்து வெம்பக்கூடாது. எதிர்த்துப் போரிடும் மனோதிடம் வேண்டும். *மனதில் எழும் எதிர்மறை எண்ணங்களைக் கண்டு பயப்படாதீர்கள். விவேகத்தைப் பயன்படுத்தி தவறான எண்ணங்களை உற்று நோக்குங்கள். அவை இருந்த இடம் தெரியாமல் மறையத் தொடங்கும். *சூழ்நிலைகளை உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்ததால், உங்களை நீங்களே இழந்து விட நேரிடும். வெற்றிகொள்வதற்காகவே இந்த மண்ணில் மனிதராகப் பிறந்திருக்கிறீர்கள். *கவலைப்பட்டுக் கொண்டு காலத்தை வீணாக்காதீர்கள். பிரச்னை தீர்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்குங்கள். அதற்கான நடவடிக்கையில்துரிதமாக ஈடுபடுங்கள். *தன்னல மற்ற மனிதர்களிடம் செல்வம் சேர்ந்தால் அதுஒரு வரப்பிரசாதம். ஆனால், சுயநலமானவர்களிடம் பணம் சேரும்போது சாபக்கேடாகமாறுகிறது. *மனதில் எப்போதும் ஆக்கபூர்வமான எண்ணத்தை நிரப்புங்கள். கவலைப்படுவதால் காலமும், மனோசக்தியும் விரயமாகிறது என்பதை உணர்வது அவசியம். *சோம்பேறியை யாரும் விரும்ப மாட்டார்கள். இறைவனும் கூட கைவிட்டு விடுவான். மனிதன் வாழ்வில் எதையாவது சாதிக்க முயற்சித்தபடி இருக்க வேண்டும். *விடாமுயற்சி உள்ளவர்கள் வாழ்வில் எத்தனையோ சாதனைகளைப் படைத்துஇருக்கின்றனர். அதற்காக வெறும் பணத்தை மட்டுமே உங்களின் வெற்றிக்கு அளவுகோலாக ஆக்கி விடாதீர்கள். *முயற்சிக்காமல் உலகை விட்டுத் தப்பி ஓட நினைப்பது முட்டாள்தனம். எங்குசென்றாலும் மனம் நம்முடன் தான் இருக்கும். அதனால் மனதை ஆளக் கற்றுக் கொள்ளுங்கள். *நான் ஒருவருக்கும் மனதாலும் தீங்கு இழைக்கவில்லை என்ற நிலையை எட்டுபவன், இந்த பூமியிலேயே மகிழ்ச்சி மிக்க மனிதனாக இருப்பான். *எல்லாரிடமும் நட்புடன் பழகுங்கள். நட்பு என்னும் பொக்கிஷம்தான் உங்களுடைய மிக உயர்ந்த சொத்து. *உண்மையான நண்பர்களிடம் கொண்ட நட்பானது பிறவியை முடித்த பின்னும் நம்மைத் தொடரும். இறைவனின் இல்லத்தில் சிநேகிதர்களை சந்திப்பீர்கள். ஏனெனில் உண்மையான அன்புக்குஅழிவில்லை. *வாழ்வோ, சாவோ, சுகமோ, துக்கமோ வாழ்வில் எந்தநிலையிலும் கவலை வேண்டாம்.இறைவா! நான் உன் குழந்தை! என்ற மனப்பான்மையுடன் செயல்படுங்கள். -பரமஹம்ச போசானந்தர்