ஸ்ரீநகர்: காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அங்கு இன்னமும் பதற்றம் காணப்படுகிறது. இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 1000 பேர் அமர்நாத் செல்ல காஷ்மீர் வந்துள்ளதால், புதிய குழு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் நிலைமை இன்றைக்குள் சீராகும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.