பதிவு செய்த நாள்
20
ஜூலை
2013
10:07
ஆடிவெள்ளிக்கிழமை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். நாகை மாவட்டம், வேதாரண்யத்திலுள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலுள்ள துர்க்கை அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 10:30 மணிக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. இதில், பெண்கள் திரளாக பங்கேற்று, நெய் தீபம் ஏற்றி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதேபோல, கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோவில், அகஸ்தியம்பள்ளி பக்தர்குலம் மாரியம்மன் கோவில், தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன் கோவில், வள்ளியம்மை ரோடு வீரபத்ரகாளியம்மன் கோவில், நாகை ரஸ்தா காசி விஸ்வநாதர் ஸ்வாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.