பதிவு செய்த நாள்
23
ஜூலை
2013
10:07
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் சவுந்தரராஜ பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அகரம் பேரூராட்சி தலைவர் தமிழரசி, துணைத் தலைவர் சக்திவேல், கவுன்சிலர்கள் அம்மாவாசி, திருமலைச்சாமி, சுப்பிரமணி, மார்த்தாள், தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் அன்புசெல்வி, கவுன்சிலர்கள் நாகப்பன், சுப்பையா, சுப்பிரமணி, பாக்கியலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், அருணா சேம்பர் உரிமையாளர் மணிகண்டன், திண்டுக்கல் போர்வெல்ஸ் உரிமையாளர் நாச்சிமுத்து, ஸ்ரீஅம்பாள் வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளர் பட்டுராஜ், தாடிக்கொம்பு பேரூராட்சி ஒப்பந்தகாரர் முருகன், எல்.கே. எஸ்., ஹோட்டல் உரிமையாளர் ஆதிமூலம், காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் தனபாலன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முத்து தியாகராஜன், உதவி ஆணையர் கருணாநிதி, கோயில் தக்கார் ரமேஷ், உதவி கோட்ட பொறியாளர் குமரன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வேலுச்சாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.