பதிவு செய்த நாள்
23
ஜூலை
2013
10:07
திருநெல்வேலி: பாளை.,திரிபுராந்தீஸ்வரர்(சிவன்) கோயிலில் ஆடித்தபசு முன்னிட்டு 3008 மாவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகளால் அம்பாளுக்கு தீபாராதனை காட்டினர்.பாளை.,திரிபுராந்தீஸ்வரர் சமேத கோமதியம்மாள் கோயிலில் ஆடித்தபசு முன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, பாளை.,திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளை சார்பில் மா விளக்கு பூஜை நடந்தது. இதற்காக 300 கிலோ மாவில் 3008 மாவிளக்கு பிடிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அம்பாள் சன்னதியில் மா விளக்கு பூஜைக்கு தேவையான இலை, வெற்றிலை பாக்கு, பழம், நெய், திரி, மாவிளக்கு ஆகியவை வழங்கப்பட்டது. பக்தர்கள் தங்கள் கைகளால் அம்பாளுக்கு மா விளக்கால் தீபாராதனை நடத்தினர். அம்பாள் மலர்பாவடை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாவிளக்கு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆடிப்பூரம்:பாளை.,சிவன் கோயிலில் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி அம்பாளுக்கு ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது. தொடர்ந்து அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளின் அருள்பெறவருமாறு திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.