மண்ணச்சநல்லூர் தாலுகா சா.அய்யம்பாளையத்தில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடும், யாகமும் நடந்தது. சா.அய்யம்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் உலக அமைதி, இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், மக்கள் நலமுடனும் ஒற்றுமையாகவும் வாழவும் வேண்டி ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு யாகமும், வழிபாடும் குருசாமி ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது.இதில், கடலூர் மாவட்டம் எ.சித்தூர் பஞ்சாயத்து தலைவர் மலர் அண்ணாமலை, ராமலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் காரை சுப்பிரமணியம், கவிஞர் சக்திதாசன், மணிரெட்டியார், சிவராஜ் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.