மண்டைக்காடு கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2013 10:07
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு கோயிலில் ஆடிமாத செவ்வாய்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடிமாத செவ்வாய்கிழமை அம்மன் கோயில்களில் விஷேசமான நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாள் அம்மனை தரிசித்தால் நோயின்றி சுபிட்ஷமாக வாழலாம் என நம்புகின்றனர். நேற்று ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்கிழமை என்பதால் மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோயிலில் காலை முதலே பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. காலை 4.30 மணிக்கு நடை திறந்து, 5 மணிக்கு அபிஷேகமும், 6.30-க்கு நடந்த தீபாராதனைக்கும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோயிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பொங்கல் ஷெட்டில் பக்தர்கள் அம்மனுக்கு மண்டையப்பம், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் ஆகிய வழிபாடுகள் செய்து அம்மனை வழிபட்டனர். மதியம் 1-க்கு உச்சகால பூஜை , மாலை 5-க்கு நடை திறந்தவுடன் பஜனை, 6.30-க்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.