பேய்க்குளம்: பேய்க்குளம் அருகே கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது.விழாவை முன்னிட்டு காலையில் விக்னேஸ்வரபூஜை, புண்யாக வாசனம், எஜமான அனுக்ஜை, மஹா கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனையும் தொடர்ந்து விமான அபிஷேகம் மற்றும் வீரபாண்டீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு வருஷாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு உத்திர நட்சத்திர விஷேட திரவிய அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், சுவாமி எழுந்தருளல், அன்னதானம் நடந்தது. வருஷாபிஷேக பூஜைகளை சிவ ஆகம முறைப்படி குலசை குமார் சிவாச்சாரியார் மற்றும் சங்கர சிவாச்சாரியார் ஆகியோர் முன்னின்று நடத்தினர். விழாவில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 102வது குருமகாசன்னிதானம் கல்யாண சுந்தர சத்தியஞான பண்டார சந்நதி சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். ஏற்பாடுகளை பேச்சிமுத்து, ஐயம்பெருமாள், கனகசபாபதி ஆகியோர் செய்தனர்.