காரைக்கால்: காரைக்கால் புனித சந்தன மாதா ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காரைக்கால் நெடுங்காடு சாலையில், பிள்ளைத்தெரு வாசல் புனித சந்தனமாதா ஆலய ஆண்டு திருவிழா நேற்று மாலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. இன்று, 25ம் தேதி மாலை 6:00 மணிக்கு சிறிய தேர்பவனி, நற்செய்தி செபக்கூட்டம் நடக்கிறது. நாளை (26ம் தேதி) மாலை 6:00 மணிக்கு திருவிழா திருப்பலி, மின் அலங்கார தேர்பவனி நடக்கிறது. 27ம் தேதி திருப்பலி முடிந்து கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்கு தந்தைகள், கிராம நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.