கர்நாடக மாநிலத்திலுள்ள நெல்லி தீர்த்தவனக் கோயில் சுமார் 1600 வருடங்கள் பழைமை வாய்ந்தது. மூலவரின் நாமம் சோமநாதீஸ்வரர். சிவனாரின் லிங்கத் திருமேனி மீது கங்காதேவி இடைவிடாது நீரைப் பொழிந்தபடி இருக்கிறாள். நாகதோஷ நிவர்த்தித் தலம் இது. இங்கே பிரசாதமாகத் தரப்படும் சிவப்பு நிற குகை மண்ணைப் பூசி வந்தால், சரும நோய்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம். மூன்றடி உயர சிவலிங்கம் மற்றும் ஜாபாலி மகரிஷி சன்னதியில் சில்லறைக் காசுகளைப் போட்டு பிரார்த்தித்தால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள் பக்தர்கள்.