சேலத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அமாவாசை கோயில். அமாவாசை தினத்தன்று இக்கோயிலுக்கு சித்தர்கள் வந்து ஆசி வழங்குகிறார்கள் என்பது ஐதீகம்! இங்குள்ள 5 அடி ஆழமுள்ள கிணறுகளில் உள்ள நீர் மூலிகைத் தன்மையும், சித்தர்களின் மகிமையும் கலந்தாக உள்ளது. முகத்தில் சருமத்தில் உள்ள பருக்கள், மருக்கள், கட்டிகள் போன்றவை நீங்க, இக்கோயிலுக்கு மூன்று அமாவாசைகள் வருவதாக நேர்ந்துகொண்டு அந்நீரைத் தடவி வர, மிக விரைவில் பருக்கள் மறையும், கட்டிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். முகப்பொலிவும் பெறலாம். இக்கோயில் சித்தர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது!