சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் கட்டுக்கரை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும்,விசேஷ அர்ச்சனையும் நடந்தது. 24ம் தேதி காலை 10:00 மணிக்கு வெள்ளாற்றங்கரையில் சக்தி கரக வழிபாடும் பால்குட அலங்கார பூஜையும் துவங்கியது. தொடர்ந்து கட்டுக்கரையில் துவங்கி சேத்தியாத்தோப்பு கடைவீதி வழியாக பால்குட ஊர்வலம் கோவிலை சென்றடைந்தது. ஊர்வலத்தில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.