பதிவு செய்த நாள்
30
ஜூலை
2013
11:07
திருப்போரூர்: திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், நாளை (31ம் தேதி) ஆடி கிருத்திகை விழா நடைபெறுகிறது. திருப்போரூரில், அறுபடை வீட்டிற்கு நிகரான, கந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் மதநல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் பிரபலமாக கொண்டாடப்படும் கிருத்திகைகளில், ஆடிகிருத்திகையும் ஒன்றாகும். அந்த வகையில் ஆடிகிருத்திகை விழா, நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. விழாவையொட்டி மூலவருக்கு, மகாஅபிஷேகம் நடக்கிறது. நாளை அதிகாலை 3.00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, மூலவர் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பல்வேறு இடங்களிலிருந்து, காவடி எடுத்து ஊர்வலம் நடைபெறும். விழாவையொட்டி ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி மற்றும் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாநகர், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிலிருந்து, திருப்போரூக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.